கொழும்பு, மருதானை பகுதியில் ரயிலில் மோதுண்டு பொகவந்தலாவை சீனாகலை
தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். இவ்விபத்து நேற்று (27) மாலை இடம்பெற்றதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.
செல்வராஜ் கஜேந்திரன் (வயது – 24) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பிலுள்ள புத்தக விற்பனை நிலையமொன்றில் அவர் தொழில் புரிந்துள்ளார். இது தொடர்பில் மருதான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்