மலேசியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையர்கள்

மலேசியாவின் சென்டுல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார்  பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சென்டுல் பகுதியிலுள்ள இலங்கை தம்பதியருக்கு சொந்தமான வீடொன்றில்  கடந்த வெள்ளிக்கிழமை (22) இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த தம்பதியின் 20 வயதுடைய மகனும், இரண்டு இலங்கையர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

சுமார் 02 நாட்களுக்கு முன்னர் குறித்த வீட்டுக்கு மேலும் இரு இலங்கையர்கள் வந்திருந்த நிலையில், அவர்கள் இந்தக் கொலைகளை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மலேசிய பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், வீட்டை சோதனை செய்த பொலிஸார், மூவரின் சடலங்களையும் கண்டெடுத்துள்ளதுடன், இரண்டு இலங்கையர்களின் புகைப்படங்களை பொலிஸாரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் மலேசிய பொலிஸார் அந்நாட்டிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

40 வயதுடைய இலங்கைத் தம்பதிகள் வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளதுடன், சம்பவத்தில் பலியான மூன்று பேரில் ஒருவர், 20 வயது திருமணமான தம்பதியின் மகன் என்றும் செந்தூல் பொலிஸ் தலைமையகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles