மலையக மக்களின் பங்களிப்பை மறக்ககூடாது!

“ பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதுதொட்பில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. எனினும், அதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

நுவரெலியாவில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

“ எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு சுமார் 200 வருட காலமாக பெருந்தோட்ட மக்கள் வழங்கிய ஒத்துழைப்பை நாங்கள் மதிக்க வேண்டும்.
நாட்டில் எவ்வாறான பிரச்சினை இடம்பெற்றாலும் தோட்ட மக்கள் பாரிய பங்களிப்பை வழங்கினார்கள். அவர்கள் அனைவருக்கும் நாங்கள் மதிக்கிறோம்.

மலையக மக்களுக்கு காணிப்பிரச்சினை இருக்கிறது. சம்பள பிரச்சினை இருக்கிறது. அவற்றை தீர்ப்போம்.” – என்றார்.

 

Related Articles

Latest Articles