மலையக மக்களுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் உறுதியான பதில்கள் பாதீட்டு விவாதம் நிறைவடைவதற்கு முன்னர் எமக்கு அவசியம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மனோ கணேசன் இவ்வாறு வலியுறுத்தினார்.
” மலையக மக்களுக்கு வழங்கப்படவுள்ளது ஏழு பேர்ச்சஸ் காணியா, 10 பேர்ச்சஸ் காணியா?
கட்டப்படவுள்ள வீடு, மாடி வீடா? கோடி வீடா?
இவை தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து முரண்பாடான கருத்துகள் வெளிவருவதால்தான் மீண்டும், மீண்டும் கேள்வி எழுப்புகின்றோம்.
இதற்கு ஆளுங்கட்சியினர் கோவப்படவேண்டியதில்லை. பதில்களை வழங்கினால்போதும்.
பாதீட்டு விவாதம் நிறைவடைவதற்கு முன்னர் தெளிவான பதில் எமக்கு அவசியம்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.
