மலையக மக்களுக்கு காணி உரிமையை விரைவில் வழங்குக!

மலையக மக்கள் தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கி வளர காணி உரிமையுடன் தனி வீட்டுத்திட்டத்தை அறிவிக்கம் நாள் எப்போது என கேட்கின்றோம் என்று அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” மலையக மக்களுக்கு மாடி வீடா? கோடிவீடா?,ஏழு பேர்ச் காணியா? பத்து பேர்ச் காணியா? எனும் அரசியல் நகைச்சுவை பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கையில் மீண்டும் தோட்ட லயன் வீட்டு தொடரில் பற்றிய தீயினால் 12 குடும்பங்களை சேர்ந்தோர் நிர்கதிக்குள்ளாகி உள்ளனர்.
மக்களுக்கு தனி வீட்டின் அவசிய தேவையை இந்நிகழ்வு மீண்டும் அவசரப்படுத்தி உள்ளது.

ஏற்கனவே மலையகத்தில் தீ காரணமாகவும் இயற்கை அனர்த்தம் காரணமாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தீர்வு இன்றியும் எதிர்காலம் இன்றியும் வீதியில் நிற்கையில் நிரந்தர வாழ்வுக்கான காணி மற்றும் வீடு தொடர்பாக முடிவு எடுக்க அரசு காலம் தாழ்த்துவது என்பது இனபடுகொலை யுடனான இனஅழிப்பு செயற்பாடு என்றே அடையாளப்படுத்த வேண்டும்.

இதுவரை காலம் இந்திய வம்சாவளி எனும் அடைமொழியோடு அழைக்கப்பட்ட மக்கள் சமூகத்தை “மலையக மக்கள்” என விளித்து நாடாளுமன்ற உரைகளின் பதிவேட்டில் பதிவிட்டு அதற்கான கௌரவத்தையும் புகழையும் தமதாக்கிய ஜனாதிபதி மலையக மக்களை தேசிய இனமாக அங்கீகரித்து ஏனைய இனங்களைப்போல சமத்துவ உரிமைகளை அரசியல் சாசனத்தில் உரித்தாக்கி அவர்கள் உருவாக்கிய மலையகம் எனும் தேசத்தில் அவர்களின் அடையாளமாய் விளங்கும் பெருந்தோட்ட பொருளாதாரத்தை சிதைக்கா வண்ணம் மலைய மக்கள் தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கி வளர காணி உரிமையுடன் தனி வீட்டுத்திட்டத்தை அறிவிக்கம் நாள் எப்போது என கேட்கின்றோம்.

மலையக மக்களைப் பொருத்தவரையில் மாற்றம் என்பது சொந்த காணி யுடனான தனி வீடு என்பதாகும் .இம்மாற்றத்தை நோக்கியே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர். தற்போதைய ஆட்சியாளர் வாக்களித்த மக்களை வாழ்விக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

வருடந்தோறும் வரும் தீபாவளி,பொங்கல் போன்று தற்போது லயன் வீடுகளில் தீ பரவி இழப்புக்களோடு வாழ்வு போராட்டம் நடாத்தும் நிகழ்வும் தொடர்கிறது. அரசிடமும் அரசியல் வாதிகளிடமும் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்ப்பது அனுதாபத்தை அல்ல நிரந்தர வாழ்வுக்கான தீர்வினை என்பதை அரசியல் தலைமைகள் உணர்தல் நலம். அதைவிடுத்து அதில் அரசியல் இலாபம் தேட முனைவது அரசியல் கோமாளி தனமாக அமையும்.

தற்போதைய பெருந்தோட்ட உட்பட்ட கட்டமைப்பு அமைச்சு மலையகத்தில் ஆயிரம் வீடுகளை திருத்தி அமைத்து வெள்ளை அடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துக்குள் உள்ளடங்கியதும் எதிர்வரும் தேர்தலை மையப்படுத்தியதுமான நிகழ்ச்சித் திட்டமா? லயத்துக்குள்ளேயே தொடர்ந்து வாழ வைக்கும் முயற்சியா? போன்ற கேள்விகளுக்கு ஆட்சியாளர் பதிலளிக்க வேண்டும். அது அவ்வாறாயின் அதனை அவர்களுடைய கண்ணில் மண்ணைத் தூவுகின்றதுக்கு ஒத்த அரசியல் செயற்பாடு என்பதாகவே உணரப்படும்.

பொருளாதாரத்தில் வளர விடாது முடக்கும் நோக்கத்தோடு வீடுகளை அமைத்துக் கொடுப்பதும்; மாடி வீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதும் மலையக மக்கள் சமூகத்தை சிதைத்து அழிக்கும் நீண்ட கால பேரினவாத செயற்பாட்டு திட்டமாகவே நாம் உணர்கின்றோம்.
அனேக மக்கள் கடந்த இருநூறு வருட காலமாக நாட்டின் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பு செய்தவர்கள் மட்டுமல்ல மழையாக வேண்டும் தேசத்தை உருவாக்கவும் பல லட்சம் பேர் உயிர் தியாகிகள் ஆன வரலாறும் அவர்களுக்கு உண்டு ஒவ்வொரு தேதி செடியில் ஆணிவேரிலும் அவர்கள் ரத்தமும் உயிரும் கலந்துள்ளனர் அத்தகைய வரலாற்று மக்களை நிலத் தொடர்பற்ற தொழிற்படையாக தொடர்ந்தும் வைக்க நினைப்பது மகா வம்ச சிந்தனையாகும்.

தேசிய மக்கள் சக்தியினர் தமது ஆட்சியில் இனவாதம், மதவாதம் என்பதற்கு இடம் கொடுக்க மாட்டோம் என்பதை மீண்டும் மீண்டும் அறிவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மலைய மக்கள் வாழ்க்கையில் அதனை நிரூபிக்க சுய பொருளாதரத்தில் தன்னிறைவு அடைவதற்கான காணி உரிமையுடன் தனி வீட்டுத் உருவாக்கி கொடுப்பதற்கான கொள்கை திட்டத்தை எதிர் வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் வெளிப்படுத்த வேண்டும்.

மேலும் இந்திய அரசின் உதவி திட்டமான பத்தாயிரம் வீட்டு திட்டம் தொடர்ந்து காலதாமதம் ஆவதை நிறுத்தி; எந்த மாவட்டத்தில் ?எந்த பிரதேச செயலாளார் பிரிவில்? எந்தெந்த தோட்டங்களில் அவ்வீட்டு திட்டம் நடைமுறைபடடுத்வுள்ளது? அதன் பயனாளிகள் யார்? அவர்களின் தெரிவுமுறை போன்றவற்றை துரிதமாக மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். அத்தோடு இவ்வீட்டுத்திட்டம் நவீன வசதிகள் அடங்கிய மாதிரி கிராமிய வீட்டு திட்டமாக அமைவதோடு; வீடுகள் கையளிக்கின்றப் போது காணிக்கணிக்கான உரிமத்தையும் பயனாளிகளுக்கு கையளிக்க ஆவண செய்திட வேண்டும்.

மலையக மக்களின் காணி உரிமைக்காக குரல் கொடுக்கும் சிவில் அமைப்புகள் அரச சாரபற்ற நிறுவனங்கள் இனியும் காலம் தாழ்த்தாது மலையக மக்களுக்கான காணி வீடு தொடர்பில் மக்களின் அழுத்தத்தை அரசுக்கு வெளிப்படுத்த துரித பன்முக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மலையக மக்களின் காணி வீட்டுரிமைக்கான முகநூல் போராட்டம் என்பது காற்றைக் கிழித்து அடிக்கும் சிலம்பாட்டத்திற்கு ஒப்பான( யாருக்கும் வலி இருக்காது அடித்தவர்கள் ஆடி அடங்கிவிடும்) செயல் என்பதையும் நினைவு கொள்ளல் நலம்.

Related Articles

Latest Articles