மலையக மக்கள் கௌரவிக்கப்பட வேண்டும் – வடிவேல் சுரேஷ் வலியுறுத்து

கம்பெனிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள தோட்டங்களை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென வடிவேல் சுரேஷ் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

200 வருடங்களுக்கு மேல் நாட்டின் அந்நிய செலாவணிக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் மலையக சமூகம் கௌரவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

ஆறு பரம்பரைகளாக மலையக தோட்டங்களில் வாழும் தொழிலாளர்கள் அந்தத் துறையை நேசிக்கின்றனர். நாமும் அந்த துறையை அதிகம் நேசிக்கின்றோம். நாட்டின் முக்கியமான வளங்களை அழிப்பவர்களிடமிருந்து அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற வர்த்தக வாணிப அமைச்சு, கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு ஆகியவற்றுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

Latest Articles