மலையக தமிழர்களுக்காக தமிழரசின் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்…..!
1949 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதியே இலங்கை தமிழரசுக் கட்சி உயதமானது.
பெருந் தலைவர் தந்தை செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி மலர்ந்தது.
தமிழரசுக் கட்சி உதயமாக, மலையகத் தமிழர்களின் பிரச்சினையும் பிரதானமாக இருந்தது. அன்று முதல் இன்று வரை மலையகத் தமிழர்களுக்காகவும் இலங்கை தமிழரசுக் கட்சி குரல் கொடுத்துவருகின்றது.
எனவே, தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையிலும் அக்கட்சி மலையகத் தமிழர்களின் அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும்.










