மலையகத்தில் கதிரை சின்னத்தில் களமிறங்கும் சு.க.!

உள்ளாட்சிசபைத் தேர்தலில் வமலையகத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கதிரை சின்னத்தில் களமிறங்கவுள்ளது என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” உள்ளாட்சிசபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முமுதும் 341 சபைகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி கதிரை சின்னத்தில் போட்டியிடவுள்ளது. தேர்தல் வழிநடத்தல் குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன. அடுத்துவரும் நாட்களிலும் பேச்சுகள் தொடரவுள்ளன. தேர்தல் என்றாலே சவால்தான். அந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்.” – எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles