” மலையகத்தில் புதிய அரசியல் கலாசாரத்துக்கு மூன்றாவது அமைப்பு கட்டாயம் தேவை”

” புதிய அரசியல் கலாசாரத்திற்கு மலையகத்தில் மூன்றாவது அமைப்பு கட்டாயம் தேவை.” – என்று மலையக சிவில் சமூக அரசியல் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான மு. சிவலிங்கம் தெரிவித்தார்.

மலையகம் நிலை மாற்றத்தை நோக்கி என்ற நூல் அறிமுக விழா தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் அடையாளம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 18 காலை 11 மணியளவில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” புதிய அரசியல் கலாசாரத்திற்கு மூன்றாவது அமைப்பு தேவை என்பதனை இந்த புத்தகம் எடுத்து காட்டியுள்ளது. இது மிக மிக முக்கியமானது என்பதை வலியுறுத்திக் கூறுகின்றேன். நூலாசிரியரும் இதனை எடுத்துரைத்துள்ளார்.

அரசியல் சக்திகளால் நாசமாக்கப்பட்ட மக்கள், அரசியல் கட்சிகளினால் நாசமாக்கப்பட்ட மக்கள், அரசியலில் உங்கள் வாக்குகளை வாங்கி கொண்டு பாராளுமன்றம் சென்ற கெட்ட சக்தியினால் நாசமாக்கப்பட்ட மக்கள் எல்லாம் ஏமாந்த நிலையில் இருக்கின்றோம்.

இன்னும் எம்முடைய வெட்கத்தை காட்டுவதற்காக 200 ஆண்டுகள் , 200 ஆண்டுகள் என்று பேசிக்கொண்டிருக்கின்றோம்

மலையகம் நிலை மாற்றத்தை நோக்கி என்ற நூல் அறிமுக விழா தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் அடையாளம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 18 காலை 11 மணியளவில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

” மூன்றாவது அமைப்பைப் பற்றி முத்துலிங்கம் சொல்கிறார்.இதனை இளைய சமூகம் நினைக்க வேண்டும். கடந்த சில தினங்களுக்கு முன் கொட்டும் மழையில் அனுரகுமார திசாநாயக்க ஹட்டனுக்கு வந்திருந்தார். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொட்டும் மழையில் காத்திருந்தனர். அது ஏன் என்றால் அமைப்பொன்றை இளைஞர்கள் தேடுகிறார்கள்.அது ஜேவிபியாக இருக்கலாம், வேறு எந்த சக்தியாகவும் இருக்கலாம் , மூன்றாவது அமைப்பு மிக அவசியம் என்பதையே அது எடுத்துக்காட்டுகின்றது .

200 ஆண்டுகள் என்பது சாதாரண விடயமல்ல.இன்னும் 47 நாட்களில் 201 ஒன்றையும் நாம் கொண்டாடத்தான் போகிறோம். நாம் இந்த நாட்டிலே வருடங்களை எண்ணிக்கொண்டு வாழும் அவமானப்பட்ட ஒரு சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேறு எந்த இனத்திற்கும் கணக்கு கிடையாது , வருடங்கள் கிடையாது நாங்கள் மட்டும் தான் எண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

இவ்வாறான நிலையில் மாகாண சபை வந்த பின் எம்முள் ஒரு தேசிய மனோ நிலை ஏற்பட்டது என்பதனை இந்த புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. நிச்சயமாக எங்களது தேசிய மனோநிலையினை உருவாக்கிக்கொள்ள வேண்டும் , எமது தேசிய இருப்பு என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் எமக்கு தேசிய இருப்பே கிடையாது. கல்வி பற்றி பேச முடியாது,கலாச்சாரத்தை பேச முடியாது , இலக்கியத்தை பேச முடியாது, அதெல்லாம் பேச வேண்டிய அவசியமில்லை. முதலில் நான் நிற்க வேண்டிய இடம் தான் தேசிய இருப்பு. ஆனால் 200 ஆண்டுகள் ஆகியும் எமக்கு தேசிய இருப்பே கிடையாது. தேசிய இருப்பை பற்றி பிறந்த முதலாவது சிந்தனை தான் 1987 ஆண்டு உருவாக்கப்பட்ட மாகாண சபை.இவ்வாறான நிலையில் காலத்தை விணாக்கிய மக்கள் தங்களுடைய துக்கத்தை தெரிவிப்பது தான் மலையகம் 200 என அவர் மேலும் தெரிவித்தார்.

மலைவாஞ்ஞன்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles