‘மலையகத்துக்கு மாடிவீடு வேண்டாம்’ – திகா வலியுறுத்து

மலையகத்தில் மாடி வீட்டுத் திட்டம் கொண்டு வருவதற்கு இணங்கிவிடக் கூடாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

லிந்துலை – பம்பரகலை பகுதியில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து நிவாரம் வழங்கும் நிகழ்வில் அவர் இவ்வாறு  கூறினார்.

நான் அமைச்சராக இருந்து 7 பேர் காணியில் வீடு கட்ட ஆரம்பித்த போது 7 பேர் போதாது என்று விமர்சித்தனர். ஆனால் தற்போது மாடி வீடு கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

மலையக மக்களுக்கு 20 பேர் காணி கொடுத்தாவது தனி வீடுகள் கட்டப்பட வேண்டும். நான் அமைச்சராக இருந்த போது  தொடங்கப்பட்ட பல வீடுகள் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. அவற்றுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து கட்டி முடிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இதில் கவனம் செலுதத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles