மஸ்கெலியா நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாமிமலை, மஸ்கெலியா, நல்லதண்ணி ஆகிய நகரங்களில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

நடமாட முடியாத அளவுக்கு கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

இதனால் நகரில் உள்ள மக்கள், பாடசாலை மாணவர்கள், நகருக்கு வரும் பாவனையாளர்கள் அச்சத்துடனேயே நடமாட வேண்டியுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

மஸ்கெலியா நிருபர்

Related Articles

Latest Articles