மஸ்கெலியாவில் போலி மாணிக்கக்கல் – ஒருவர் கைது

போலி மாணிக்கக்கல்லை விற்பனை செய்த நபரொருவர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாங்கொடை பெட்டிகல நவநிவசபுர பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கோபால கிருஸ்ணன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி மஸ்கெலியா ராணி தோட்டத்தை சேர்ந்த ஒருவருக்கே ஒரு லட்சத்து 98 ஆயிரம் ரூபாவை வாங்கிக்கொண்டு குறித்த போலி மாணிக்கக்கல் வழங்கப்பட்டுள்ளது என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மோசடியில் ஈடுபட்டவர் 17 ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போதும் அவர் போலி மாணிக்கக்கல்லொன்றை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

மஸ்கெலியா நிருபர் பெருமாள்

Related Articles

Latest Articles