முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோசித ராஜபக்ச, எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி சிஐடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக சொத்து சேகரிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.
அதேவேளை, மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரதானியாக செயற்பட்ட நெவில் வன்னியாராச்சியிடம் சிஐடியினர் நேற்று முன்தினம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
சட்டவிரோதமாக சொத்து சேகரிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் சுமார் 4 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.