மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க முடிவு

மாகாணசபைகளுக்கான தேர்தலை அடுத்தாண்டுவரை பிற்போடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அண்மையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதன்போதும் இவ்விவகாரம் தொடர்பில் அதானம் செலுத்தப்பட்டது.

இந்நிலையிலேயே கொரோனா வைரஸ் பரவல், எல்லை நிர்ணயம் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக்கொண்டு தேர்தலை பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் செப்டம்பர் மாதத்துக்குள் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தி முடிக்கும் நிலைப்பாட்டிலேயே அரசு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை நடத்தும் விதம் குறித்து அரசால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு சிறு கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. தேர்தல் பிற்போவதற்கு இதுவும் ஒரு காரணமாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles