மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு எமது கட்சி தயாராகவே இருக்கின்றது – என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.
” இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை பயணத்துக்கும், மாகாணசபைத் தேர்தலுக்குமிடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது.

தேர்தலை நடத்தக்கூடிய சூழல் உருவாகும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்படும். நாமும் தயாராகவே இருக்கின்றோம்.” – என்றார்.










