“மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன பொது பட்டியலின்கீழ் போட்டியிடும்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
“ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைந்து செயல்படுவதற்குரிய பேச்சு வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. உரிய நேரத்தில் இணைவு நடக்கும்.
கிராமிய மட்டத்தில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களும் இணைந்தே பயணிக்கின்றனர். எனவே, அவர்களின் முடிவுக்கு தலைமைகள் நிச்சயம் கட்டுப்பட்டாக வேண்டும்.
எது எப்படி இருந்தாலும் மாகாணசபைத் தேர்தலில் பொதுபட்டியலின்கீழ் களமிறங்குவோம். தேர்தலை நடத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
சின்னம், கூட்டணி வியூகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.” – எனவும் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.
