மாகாணசபைத் தேர்தல்: சட்டமூலம் விரைவில் முன்வைப்பு!

மாகாண சபைத் தேர்தல் (திருத்த) சட்டமூலத்தை அடுத்த நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்கப்படவுள்ளதென தெரியவருகின்றது.

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக தனிநபர் சட்ட மூலம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க இந்த சட்டமூலத்தை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சபையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இதனை தனி நபர் பிரேரணையாக அவர் சமர்ப்பிக்கவுள்ளதாக தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது காணப்படும் தடைகளை நீக்குவதே, இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Articles

Latest Articles