மாகாவலி கங்கையில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி பலி!

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்று திரும்பும் வழியில் மகாவலி கங்கையில் நீராடிய இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கினிகத்தேனை நகருக்கு அருகில் இன்று பிற்பகல் 3 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலத்தை கெனில்வேர்த் தோட்ட மக்களும் பொலிஸாரும் இணைந்து மீட்டுள்ளனர்.

புத்தளத்திலிருந்து சிவனொளிபாத மலைக்கு பேருந்து மூலம் யாத்திரை சென்ற குழுவினர் மீண்டும் புத்தளம் நோக்கி திரும்பும் வழியில் கினிகத்தேனை நகருக்கு அருகில் மகாவலி கங்கையில் நீராடி உள்ளனர் இதன்போது நீராடியவர்களில் இளைஞனொருவன் ஆற்றில் உள்ள கற்பாறை ஒன்றில் சிக்கிக் கொண்டதையடுத்து உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் புத்தளத்தைச் சேர்ந்த 19 வயதான
கவிந்து சிசிர என்பவராவார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கினிகத்தேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles