சட்டபூர்வ மருத்துவ தகைமை இன்றி மாணவர் ஒருவருக்கு கொவிட் தடுசப்பூசி வழங்கிய குற்றச்சாட்டில் அமெரிக்காவில் பாடசாலை ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லோரா ருசோ என்ற அந்த ஆசிரியை தடுப்பூசி வழங்குவதற்கான சட்டரீதியான அனுமதி அல்லது சிறுவனின் பெற்றோரது ஒப்புதல் இன்றி தனது வீட்டில் வைத்து தடுப்பூசியை வழங்கி இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
54 வயது உயிரியல் ஆசிரியையான ரூசோ புத்தாண்டு தினத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.