அனுராதபுரத்தில் பாடசாலை ஒன்றில் 15 வயது மாணவன் ஒருவன் அதே பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயது மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனுராதபுரத்தில் கெக்கிராவ ரணஜயபுர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இக் கத்தி குத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் மாணவியே இவ்வாறு கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் மாணவியின் இடது கை மற்றும் இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த மாணவி சிகிச்சைக்காக கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மாணவியை குத்த பயன்படுத்திய கத்தியுடன் குறித்த மாணவன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்த போது பொலிஸார் அவரை கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.