மாவீரர் இல்லங்களை தமிழர்களிடம் ஒப்படையுங்கள்!

வடக்கு, கிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை அங்கீகரித்து, அங்கிருந்து இராணுவத்தை வெளியேற்றி அவற்றை தமிழ் மக்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம், இலங்கை தமிழரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் மேற்படி வேண்டுகோளை முன்வைத்தார். ,

“ ஜே.வி.பியின் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கார்த்திகை வீரர்கள் தினம் நவம்பர் 13 ஆம் திகதி நினைவு கூறப்படுகின்றது. இடதுசாரி கொள்கையுடன் போராடிய வீரன் என்ற அடிப்படையில் நானும் அஞ்சலி செலுத்துகின்றேன்.

கார்த்திகை மாதத்தில் வடக்கு, கிழக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் 32 இற்கு மேற்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ளன.
எங்களது இனத்துக்காக, விடுதலைக்காக போராடிய மாவீரர்கள். பொதுமக்கள் விதைக்கப்பட்டுள்ள அந்த புனிதமான – கண்ணியமான இடங்களை பாதுகாக்க வேண்டும்.

மாவீரர் துயிலும் இல்லங்களைவ டக்க, கிழக்கில் வாழும் தமிழ் மக்களிடம் பொறுப்பு கொடுக்க வேண்டும் . இடங்களை அங்கீகரிக்க வேண்டும். அந்த இடங்களில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும். மக்கள் சுதந்திரமாக நினைவு கூறுவதற்கு இடமளிக்க வேண்டும்.
நீங்கள் நிதி ஒதுக்க தேவையில்லை. நாங்கள் தமிழர்கள் நிதி ஒதுக்கி, புனிதமான இடங்களை பாதுகாப்போம்.”- என கோடீஸ்வரன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles