உத்தேச மின் கட்டண திருத்த சட்டமூலம் அமைச்சரவையின் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்
இதன்படி. எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது, இந்த சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சக்தி துறையினருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.