மின் கட்டணம் அதிகளவில் குறையும்

அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ள மின்சார கட்டணக் குறைப்பை விட  அதிகமான கட்டணக் குறைப்பை எதிர்வரும் ஜனவரியில்  மேற்கொள்ள எதிர்பாரக்கிறறோம் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (01) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கம் பெப்ரவரி மாதத்தில் மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் போது வருடாந்தம் இரு தடவைகள் அந்த விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என பகிரங்கமாக அறிவித்திருந்தோம்.

குறிப்பாக ஜூலை மாதத்தில் கட்டண திருத்தம் மேற்கொள்வோம் என தெரிவித்திருந்தோம். அதற்கிணங்கவே நாம் தற்போது மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

இதைவிட அதிகமாக எதிர்வரும் ஜனவரி மாதத்தில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Related Articles

Latest Articles