கொழும்பு – பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை ஹல்பே பகுதியில் 33, 000 அதிவேக மின் கம்பத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதியதில் மின்கம்பம் உடைந்து வீதியில் விழுந்துள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது. இன்று காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக ஹல்பே தொடக்க ஹல்தமுல்ல வரையான பகுதிகள் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை தொடக்கம் தியதலாவ பகுதி வரை 33000 அதி வேக மின்சாரத்தை எடுத்துச் செல்லும் மின்கம்பமே இவ்வாறு உடைந்து வீதியில் விழுந்துள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பயன்பாடுகள் எவருக்கும் ஆபத்தில்லை என சமனலவெவ காவல் துறையினர் தெரிவித்தனர். பேருந்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கு காரணம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை சமனலவெவ காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.எப்.எம். அலி