மின்சார சட்டமூலம் நிறைவேற்றம்!

இலங்கை மின்சார சட்டமூலம் இன்று (06) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு 44 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இன்று சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு விவாதத்தின் பின்னர் எதிர்கட்சியினால் வாக்கெடுப்பு கோரப்பட்டதுடன் அதற்கமைய இடம்பெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 103 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் வழங்கப்பட்டன.

அதனையடுத்து, குழுநிலையின் போது சட்டமூலத்துக்கு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டதுடன், மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.

மின்சக்தித் துறையில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புகளை செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் நோக்கிலான இந்த சட்டமூலம் 2024 ஏப்ரல் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

Related Articles

Latest Articles