மின்சாரம் தாக்கி இளைஞன் பலி – யாழில் சோகம்!

யாழ். தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி – இயற்றாலைப் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாவளை, இயற்றாலைப் பகுதியைச்சேர்ந்த 34 வயதான இளைஞரே சம்பவத்தில் சாவடைந்துள்ளார்.

மேற்படி இளைஞர் தனது வீட்டில் நேற்று மின் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞருடைய சடலம் மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொடிகாமம் பொலி ஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles