மீண்டும் விலை குறைக்கப்படும் லிட்ரோ

இலங்கையில் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்றைய தினம் (02-07-2023) ஞாயிற்றுக்கிழமை மீண்டும் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று நள்ளிரவுக்கு முன்னதாக புதிய விலைகள் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 05 ஆம் திகதி 12.5 கிலோ எரிவாயுவின் விலை 452 ரூபாயினாலும், 05 கிலோ சிலிண்டரின் விலை 181 ரூபாயினாலும், 2.3 கிலோ சிலிண்டரின் விலை 83 ரூபாயினாலும் லிட்ரோ நிறுவனம் குறைத்தது.

Related Articles

Latest Articles