முகம் பளபளக்க மொய்ஸ்சுரைசரை பயன்படுத்தும் முறைகள்!

பெரும்பாலானோர் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக்கொள்வதற்காக மொய்ஸ்சுரைசரை பயன்படுத்துகிறார்கள். அவை சருமம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளையும் போக்கும் தன்மை கொண்டது. இருப்பினும் மொய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தினால் அது சருமத்திற்கு தீங்கு விளைவித்துவிடும்.

மொய்ஸ்சுரைசரை பயன்படுத்தும்போது அவை சருமத்தில் முழுமையாக உறிஞ்சப்பட வேண்டும். சருமத்திற்குள் ஊடுருவுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளவும் கூடாது. மொய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தும்போது உருவாகும் கூடுதல் ஈரப்பதம் சருமத்திற்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக சரும செல்கள் பலவீனமடையும். சரும துளைகள் முழுவதும் அடைபடும் அபாயமும் உண்டாகும். அதனால் முகப்பரு மற்றும் வறண்ட சரும பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடலாம்.

மேலும் தேவைக்கு அதிகமாக மோய்ஸ்சுரைசரை உபயோகிக்கும்போது சருமம் புத்துணர்ச்சியை இழந்துவிடும். சோர்வு எட்டிப்பார்க்கும். சருமத்தில் தென்படும் ஒருசில அறிகுறிகளை கொண்டே மோய்ஸ்சுரைசரை அதிகம் தடவி இருப்பதை அறிந்து கொள்ளலாம். சருமத்தில் கருப்பு புள்ளிகள் தென்படுவது, சரும துளைகள் அடைப்பட்டிருப்பது, அதிக எண்ணெய் பசைத்தன்மை தென்படுவது, சருமத்தில் புள்ளிகள், தடிப்புகள் எட்டிப்பார்ப்பது, இறந்த செல்கள் வெளிப்படையாக தெரிவது போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும். மொய்ஸ்சுரைசரை அதிகம் தடவும்போது சருமத்தில் சிவப்பு நிற திட்டுக்களும் தோன்றும். அதனை பயன்படுத்திய பிறகு முகத்தில் ஏதேனும் மேக்கப் பொருட்களை பயன்படுத்தினால் அது சருமத்தில் ஒட்டிக்கொள்ளாது.

மொய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தும்போது அதில் இருக்கும் அதிக ஈரப்பதம் முகத்தில் ஈரப்பதத்தை அதிகரித்துவிடும். மேலும் முகத்தின் இயற்கையான அழகை குறைத்துவிடும். ஒப்பனை செய்யும்போது அது சரியாக சருமத்தில் கலப்பதற்கும் அனுமதிக்காது. முகத்தில் புள்ளிகள், திட்டுகளை ஏற்படுத்தும். மொய்ஸ்சுரைசரை சரியான அளவில் பயன்படுத்தினால் மட்டுமே குளிர்காலத்தில் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க முடியும். மொய்ஸ்சுரைசரை பயன்படுத்துவதற்கான சரியான வழிமுறைகள்

* பட்டாணி அளவிலோ அல்லது அதை விட சற்று அதிகமாகவோ மொய்ஸ்சுரைசரை எடுத்து உள்ளங்கையில் நன்றாக தேய்த்து கைகளை சூடாக்க வேண்டும். பின்பு கன்னங்களில் வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். பிறகு நெற்றி, தாடை பகுதியில் தடவ வேண்டும். கழுத்தில் தேய்க்கும்போது கீழிருந்து மேல்நோக்கி தடவ வேண்டும்.

* காலையில் எழுந்ததும் முகம் கழுவிய பிறகு லேசாக டவலில் துடைத்துவிட்டு மொய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே சருமம் ஈரப்பதமாக இருப்பதால் அதிக அளவில் மொய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கு அது வழிவகுக்கும்.

* இரவில் தூங்க செல்வதற்கு முன்பும் மொய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும். அது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து மென்மையாக்கும்.

* சருமம் ஏற்கனவே வறண்டு போய் இருந்தால் அதற்கேற்ப மொய்ஸ்சுரைசரை சற்று அதிகமாக பயன்படுத்தலாம். ஆனால் சருமம் எண்ணெய் தன்மையுடன் இருந்தால் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.

* வாரத்திற்கு ஒரு முறை இறந்த செல்களை அகற்றவும் வேண்டும். இதனால் சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டு மொய்ஸ்சுரைசரை சரியாக செயல்பட வைக்கும். இதன் மூலம் தேவையற்ற சரும பிரச்சினைகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles