இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது ரி – 20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி , நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்த 163 ஓட்டங்களைப் பெற்றது.
164 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது. தினேஷ் சந்திமால் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்களாக 66 ஓட்டங்களை பெற்றார்.