” அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு இணக்கம் தெரிவித்துவிட்டு, வெளியில் வந்து அறிக்கைகளை விடுத்து மாபெரும் வீரர்கள் ஆவதற்கு முயற்சிக்க வேண்டாம்.” – என்று பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக நாட்டை இரு வாரங்களுக்கு முடக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 பங்காளிக் கட்சிகள் கூட்டறிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில் பங்காளிக்கட்சிகளின் இந்த செயற்பாட்டை கடுமையாக விமர்சித்த மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், கூட்டு பொறுப்பைமீறும் செயல் எனவும் சாடினார்.
அமைச்சரவையில் கதைப்பதற்கு முதுகெலும்பற்றவர்கள், வெளியில்வந்து ஊடகங்களுக்கு அறிக்கைவிடுத்து வீரர்களாவதற்கு முயற்சிக்கின்றனர். இது கூட்டணி அரசுக்கு பொருத்தமற்ற செயலாகும் எனவும் கடும் விசனத்தை வெளியிட்டார் மொட்டு கட்சியின் செயலாளர்.
எனவே, இது தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் சார்பில் கோரிக்கையையும் முன்வைத்தார்.
