இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மலையகத்தில் முன்பள்ளி ஆசிரியர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் உரிய நேரத்தில் சில உதவிகளை செய்தார் என்றும், இவ்வாறான உதவிகளை மறக்க முடியாது என்றும் அந்த ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான உதவிகளை வெளியே சொல்வதால் மட்டுமே, பாதிக்கப்படும் தம்மைப் போன்றோருக்கு இன்னும் சில உதவிகள் கிடைக்கும் என்பதால் இந்தப் பதிவை பகிர்ந்துகொள்ளுமாறு இந்தப் பதிவை அனுப்பிவைத்த நபர் கோரியிருந்தார்.
குறித்த ஆசிரியர் அனுப்பிவைத்த பதிவு கீழே :
நெருக்கடியாக காலகட்டத்தில் உதவி செய்த நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமாருக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து!
மலையகம் விடிவு கல்வியில் தான் தங்கியுள்ளதாக பலருடைய கருத்தாக இருந்தாலும் எத்தனை பேர் இந்த சமூகத்தை பற்றி ஆக்கபூர்வமாகவும் முழுமையாக சிந்திக்கின்றார்கள் என்பது கேள்விக்குறியான விடயமே.
1987 ஆண்டு தொடக்கம் நான் ஓயா பகுதியில் அடிப்படை வசதிகள் அற்ற தோட்டங்களில் வாழும் மக்களின் மேம்பாட்டுக்காக ஆரம்பக்கல்வி என ஆரம்பித்து வருமானம் என்ற நோக்கில் இல்லாமல் சமூக நோக்கோடு செயல்பட்டு வருகின்ற முன்பள்ளி ஆசிரியர்கள் இன்னும் அரசாங்கத்திற்கு அரசியல்வாதிகளுக்கும் கண்களுக்கு தென்படாமல் இருக்கின்றனர்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக முன்பள்ளி ஆசிரியர்களின் தொழில் வாய்ப்பு இல்லாமல் வருமானம் இழந்த நிலையில் தங்களின் குடும்பம் தத்தளிக்கின்ற நிலையில் யாரும் இவர்களின் பணிகளை கண்டுகொள்ளாமல் இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை கூட பார்க்க நேரமில்லாமல் இருக்கிறது.
இந்த சமூகத்தின் மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் என்ற தனிநபர் சற்று வித்தியாசமான சிந்தனையாளர் என்றே கூற வேண்டும்.
மற்ற அரசியல்வாதிகளை விட இம்மக்களின் அபிவிருத்தி என நினைத்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த இவர் இன்றும் மக்களுக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் உதவிக்கரம் நீட்டி மக்களை சிம்மாசனத்தில் அமர வைப்பதில் பின்தங்கியது இல்லை.
அந்த வகையில் பாதிக்கப்பட்டிருந்த முன்பள்ளி ஆசிரியர்களின் குடும்பத்தின் நலன் கருதி நான் ஓய பிரதேசத்தில் முன் பள்ளிகளை நடத்தும் இந்த ஆசான்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்தமை பெரும் பாராட்டக்கூடிய விடயமே.
இந்த உன்னதமான பணியை மேற்கொண்ட நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் அவர்களுக்கு, ஆசிரியர்கள் தங்களின் நன்றிகளை சமர்ப்பிப்பதுடன் உங்களுக்கு என்றும் நன்றி உடையவர்களாக இருப்பார்கள்.
உன் பணி தொடரட்டும்
மக்கள் சேவை மலரட்டும்
உங்களின் குடும்பம் வாழ்க வளமுடன்
நானுஓயா பிரதேச முன்பள்ளி ஆசிரியர்கள் அனுப்பிய வாழ்த்து