மும்பை இந்தியஸ்ன் அணியில் மாலிங்கவிற்கு பதில் ஜேம்ஸ்

ஐ.பி.எல். தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணியில் இம்முறை லசித் மாலிங்க விளையாடட மாட்டார் எனத் தெரியவருகிறது.

2020 ஐ.பி.எல். தொடரில் இம்முறை பங்கேற்க முடியாது என மாலிங்க அறிவித்துள்ள நிலையில், இதற்குப் பதிலாக அவுஸ்திரேலிய வீரர் James Pattinson இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவும், குடும்பத்தாருடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் தன்னால் இம்முறை பங்கேற்க முடியாது என லசித் மாலிங்க மும்பை இந்தியஸ்ன் அணிக்கு அறிவித்துள்ளார்.

இவ்வார இறுதியில் அபுதாபியில் உள்ள அணியுடன் James Pattinson இணைந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

”ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக James Pattinson பொருத்தமானவராக இருப்பார்” என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகேஸ் அம்பானி தெரிவித்துள்ளர்.

”லசித் மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணியின் பக்கபலம். மாலிங்கவின் வெற்றிடத்தை நாம் உணர்கிறோம். எனினும், இந்தத் தருணத்தில் அவர் குடும்பத்தாருடன் இலங்கையில் இருக்க வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. எமது அணி ஒரே குடும்பமாக உணர்கிறோம். தற்போது புதிய உறுப்பினர் James Pattinsonஐ மனதார வரவேற்கிறோம்.” என்று ஆகேஸ் அம்பானி தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Latest Articles