முல்லைத்தீவில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஐஸ் எனப்படும் போதைப்பொருள் பாவனை இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படும் நிலையில் இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

22 அகவையுடைய கள்ளப்பாடு தெற்கினைச் சேர்ந்த இளைஞன் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் 21 அகவையுடைய உண்ணாப்பிலவு வடக்கினைச் சேர்ந்த இளைஞன் 4கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். கைதுசெய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருட்கள் தொடர்பில் முல்லைத்தீவு பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்கள். முல்லைத்தீவில் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரம் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

Related Articles

Latest Articles