அடிப்படைவாதிகளின் ஆதரவு இல்லாமல் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பலம்வாய்ந்த அரசாங்கமொன்று அமைக்கப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும: கூறியவை வருமாறு,
” கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எமது அணிக்கு கிடைத்த வாக்குகளை அடிப்படையாகவைத்து பார்த்தால் 126 ஆசனங்கள் இலகுவில் கிடைத்துவிடும். அதேபோல் நுவரெலியா, வவுனியா , திருகோணமலை மற்றும் திகாமடுல்ல ஆகிய மாவட்டங்களையும் கைப்பற்றினால் அதன்மூலமும் ஆசனங்கள் கிடைக்கும்.
மறுபுறத்தில் கொழும்பு, குருணாகலை ஆகிய மாவட்டங்களில் கடந்தமுறையைவிட மூன்று ஆசனங்கள் அதிகம் கிடைக்கும். அத்துடன், அம்பாந்தோட்டை, காலி ஆகிய மாவட்டங்களில் இரண்டு ஆசனங்களை அதிகமாக பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
மொனறாகலை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் எமக்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது. எனவே, மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவதில் சிக்கல் இருக்காது. ஆக அடிப்படைவாதிகள் இல்லாத பலமானதொரு அரசாங்கத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைக்கும்.” – என்றார்.