முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மலை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் நாயாறு மீன்பிடித்துறை பகுதியும், கேகாலை மாவட்டத்தில் மிஹிபிட்டி கிராம சேவகர் பிரிவில் மாதெய்யாவ கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் பிரிவில் மருதமுனை -3 கிராம சேவகர் பிரிவும் இன்று காலை முதல் முடக்கப்பட்டுள்ளது.
