மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி!

நு/மெரயா தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மென்பந்து கிரிக்கட் சுற்றுபோட்டி எதிர்வரும் 24, 25ஆம் திகதிகளில் இலங்கை தேயிலை ஆராயச்சி நிலையம் (TRI) விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற உள்ளது.

நு/மெரயா பாடசாலையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பழைய மாணவர் ஒன்றியத்தின் ஊடாக மேற்கொள்வதை இலக்காக கொண்டும், இப் பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்களை ஒன்றினைப்பதற்காகவும் இந்த கிரிக்கெட் சுற்று போட்டி நடைபெறவுள்ளதாக பழைய மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நு/மெரயா பாடசாலையில் கல்வி கற்ற அனைத்து பழைய மாணவர்கள் சார்பான அணிகள் இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பங்குபெற முடியுமென அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

ஆ.ரமேஸ்

Related Articles

Latest Articles