மே தின கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த ஐ.தே.க. ஏற்பாடு!

ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை காட்டும் வகையில் மிகவும் பிரமாண்டமான முறையில் மே தின கூட்டத்தை, பேரணியை நடத்துவதற்கு அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

மே தின கூட்டம் கொழும்பிலேயே நடைபெறும் எனவும், இடம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ள எதிரணி உறுப்பினர்கள் மே முதலாம் திகதி மேடையேறுவார்கள் எனவும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றில் இது மிகவும் பிரமாண்டமான மே தின கூட்டமாக அமையும் எனவும், அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles