ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மே தினக் கூட்டம் மே முதலாம் திகதி கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
மே தினக் கூட்டத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, மொட்டு கட்சியின் மாவட்ட மட்டத்திலான கூட்டம் அம்பாந்தோட்டையில் இருந்து ஆரம்பமாகவும் எனவும் எஸ்.எம். சந்திரசேன குறிப்பிட்டார்.
