ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு வழங்காவிட்டாலும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் களமிறங்குவார் – என்று அடித்துக் கூறியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க.
ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவதற்காக நால்வரின் பெயர்களை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பரிசீலித்துவருகின்றது என்று அக்கட்சியின் செயலாளர் கூறியிருந்தார்.
இந்த நால்வரில் ஜனாதிபதியிடம் பெயரும் உள்ளதா? அவ்வாறு இல்லாவிட்டாலும் – அதாவது மொட்டு கட்சியின் ஆதரவு இல்லாவிட்டாலும் ரணில் போட்டியிடுவாரா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார் .
” மொட்டு கட்சியின் பெயர் பட்டியலில் ஜனாதிபதி ரணிலின் பெயர் உள்ளதா என்பதை அக்கட்சியினரிடம்தான் கேட்க வேண்டும். மொட்டு கட்சி மட்டும் அல்ல ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவையும் ஜனாதிபதி கோரியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மட்டுமே நாட்டை மீட்க முடியும். மொட்டு கட்சி ஆதரவு வழங்கினாலும், வழங்காவிட்டாலும் அவர் நிச்சயம் போட்டியிடுவார்.” – என்றும் ஆசுமாரசிங்க குறிப்பிட்டார்.