மொட்டு கட்சி, பீரிஸ் அரசியல் சமர் உக்கிரம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், பேராசிரியர் ஜி.எல். பீரிசுக்கும் இடையிலான அரசியல் சமர் உக்கிரமடைந்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் பொதுச்சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சட்டவலுவற்றவை எனவும், அவை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படும் எனவும் சட்டத்துறை பேராசிரியரான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் கட்சி தலைவைர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கடந்த சனிக்கிழமை (22) கட்சி தலைமையகத்தில் கூடியது.
இதன்போது புதிய நிர்வாக சபை தேர்வு இடம்பெற்றது. ஏற்கனவே பதவிகளை வகிப்பவர்கள் அப்பதவிகளில் நீடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது என்று கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் தான்தான் என டலஸ் அணி பக்கம் உள்ள பீரிஸ் கூறிவரும் நிலையில், புதிய தவிசாளரை மொட்டு கட்சி நியமித்தது.
எனினும், இந்த நியமனம் சட்டப்பூர்வமானது அல்ல என பீரிஸ் கூறியுள்ளார்.

” புதிய தவிசாளர் நியமனம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் . ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடந்த சனிக்கிழமை நடத்திய பொதுச்சபைக் கூட்டம் சட்டவிரோதமானது என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். கூட்டத்தின் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் செல்லுபடியற்றவையாகும். நீதிமன்றம் ஊடாக இதனை நாம் நிரூபிப்போம்.” – எனவும் பீரிஸ் குறிப்பிட்டார்.

எனினும், பொதுச்சபைக் கூட்டம் சட்டப்பூர்வமானது என்று மொட்டு கட்சியின் பொதுச்செயலாளர் நேற்று அறிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles