ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாதீட்டை ஆதரிக்காத பட்சத்தில் அக்கட்சியை அரச கூட்டணியிலிருந்து உடன் வெளியேற்ற வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் கட்சி தலைமைப்பீடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புக்கு ஆதரவாக சுதந்திரக்கட்சி வாக்களித்தது. எனினும், மொட்டு கட்சி உறுப்பினர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் மூன்றாம் வாசிப்புமீதான அதாவது இறுதி வாக்கெடுப்பின்போது அக்கட்சி எதிராக வாக்களிக்கக்கூடும் அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நழுவக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டால் , சுதந்திரக்கட்சியை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் முடிவொன்றை எடுப்பதற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயற்குழு இன்று கூடவுள்ளது.










