மொனராகலை மாவட்டத்துக்குட்பட்ட புத்தல மற்றும் அதனை சூழ உள்ள சில பகுதிகளில் சிறு அளவிலான நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நேற்றிரவு 11.20 மணியளவில் 2.4. ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது என்று புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
நான்கு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நில நடுக்கத்தால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
