யாழில் இளம் குடும்பஸ்தர் கொலை: சந்தேக நபர்களுக்கு மறியல்!

யாழ்ப்பாணம் – பொன்னாலையில் கடத்தி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை மாவடி பகுதியை சேர்ந்த 24 வயதான ஒருவர் கடந்த 11 ஆம் திகதி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கடந்த 12 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில், மற்றுமொருவர் அதற்கடுத்த நாள் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர்கள் ஐவரும் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு தரப்பினருக்கு இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் கூறினர்.

இந்த நிலையில், சந்தேகநபர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

Related Articles

Latest Articles