யாழில் ரயிலுடன் மோதி வேன் விபத்து – இருவர் பலி!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் வேன் மோதி இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட இருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இன்று மாலையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வேனில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உட்பட இருவர் பலியாகியுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 

Related Articles

Latest Articles