யாழில் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த ஐவர் வாளுடன் மடக்கிப் பிடிப்பு

யாழ்ப்பாணத்தில் ஓட்டோவில் பயணித்த வாள் வெட்டுக் கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

யாழ். நகருக்கு அண்மையாக நேற்று அதிகாலை 2 மணியளவில் ஆட்டோவில் பயணித்த 5 பேர் விசேட அதிர டிப் படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

யாழ். மத்யூஸ் வீதியைச் சேர்ந்த 25 வயதான ஓட்டோ சாரதி, கொக்குவி லைச் சேர்ந்த 25 வயதான இளைஞன், யாழ். நகரத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞன், குருநகரைச் சேர்ந்த 26 வய தான இளைஞன், வண்ணார்பண்ணை யைச் சேர்ந்த 19 வயதான இளைஞன் ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் பயணித்த ஓட்டோவில் இருந்து வாள், இரும்புக் கம்பி, இரும்புக் குழாய் என்பன மீட்கப்பட்டன.

 

Related Articles

Latest Articles