யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முரண்பாடே இந்தத் தாக்குதல் சம்பவத்துக்குக் காரணம் என்று முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles