யாழ். நகரில் கடைகள், சொத்துக்களை எரிக்க பெல்ஜியத்தில் இருந்து 12 இலட்சம் ரூபா ‘டீல்’ – மூவர் கைது!

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார் மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள இரண்டு கடைகள் அண்மையில் எரிக்கப்பட்டன. 2 கோடி ரூபா பெறுமதியான பொருள்கள் இதன்போது எரிந்து அழிந்தன.

அத்துடன் கார் ஒன்றும் எரிக்கப்பட்டது. இதைவிட மோட்டார் சைக்கிள் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இவை தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் முறையிடப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் நேற்று மூன்று பிரதான சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு வாள் என்பனவும் மீட்கப்பட்டன. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபர் ஒருவரின்பெல்ஜியம் வாழ் பெரியம்மாவின் நட்பு வட்டாரத்திலிருந்து விடுக்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே இந்த விஷமச் செயலில் அவர்கள் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடைகளை எரிப்பதற்காக 12 இலட்சம் ரூபா பணமும், வாகனங்களை எரிப்பதற்காக 7 இலட்சம் ரூபா பணமும் பெல்ஜியத்தின் இருக்கும் நபரிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுவதற்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக ஒன்றரை இலட்சம் ரூபா பணமும் அவர்களுடைய வங்கிக் கணக்குக்குச் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றச் செயல்களின் சூத்திரதாரியான பெல்ஜியம் வாழ் நபரைஇன்டர்போலின் உதவியுடன் கைது செய்யப் பொலிஸார் நடவடிக்கைகளை முன் னெடுத்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles