யாழ். நூலகத்தை எரித்த பாவிகள்தான் எங்களை கொலைகாரன் என்கிறார்கள்…..!

ஐக்கிய தேசியக் கட்சியே இலங்கையில் கொலை மற்றும் சித்திரவதைக் கலாசாரத்தை உருவாக்கியது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொலை பட்டியல் தொடர்பில் எதிரணி உறுப்பினர் ஒருவர் உரையாற்றினார். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு ஐக்கிய தேசியக் கட்சியினரே கொலை கலாசாரத்தை அறிமுகப்படுத்தினர். 1956,1958 இல் எமது மக்களை கொலை செய்தார்கள். இந்நாட்டில் இனக்கலவரத்தை தூண்டினார்கள். அவசரகால சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் என்பவற்றைக்கொண்டுவந்து இளைஞர்கள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொலை செய்தார்கள்.

யாழ். நூலகத்தை எரித்து சாம்பலாக்கிய பாவிகள்தான் ஐக்கிய தேசியக் கட்சியினர். இவர்கள்தான் இன்று எம்மை கொலைக்காரன்கள் என்கிறார்கள். சிறைச்சாலையில் இருந்த குட்டிமணி ஜெகநாதன் போன்றவர்களின் கண்களைத் தோண்டி எடுத்து சிறைக்கைதிகளை கொன்றவர்கள்.

போர் மூள்வதற்கு காரணமாக இருந்தவர்கள் இன்று தங்களை புனிதர்களாக காண்பித்துக்கொள்வதற்கு முற்படுகின்றனர்.” – என்றார்.

Related Articles

Latest Articles