யாழ். பல்கலை மாணவிகளுக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகளின் தொலைபேசிகளுக்கு அழைப்பெடுக்கும் மர்ம நபர் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது

மாணவிகளின் தொலைபேசிகளுக்கு இரவு வேளைகளில் அழைப்பெடுக்கும் நபர் ஆபாசமாக பேசி வந்துள்ளார். அவரின் தொலைபேசி இலக்கத்திலிருந்து அழைப்பு வராதவாறு தடுத்தாலும் (ப்ளக்) வேறு இலக்கங்களிலிருந்து அழைப்பெடுத்து மாணவிகளை இம்சைக்குள்ளாக்கி உளவியல் ரீதியாக பாதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மாணவிகளால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவித்த போதிலும், நிர்வாகம் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே தமக்கு தொலைபேசியில் தொல்லை தரும் மர்ம நபர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

முறைப்பாட்டில் நபரின் தொலைபேசி இலக்கத்தினை மாணவிகள் வழங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles