யுக்திய ஒப்பரேஷன் – 8,591 பேர் கைது! 7 கிலோ ஹொரோயின் மீட்பு!!

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கையின்போது 8 ஆயிரத்து 591 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

‘யுக்திய ஒப்பரேஷன்’ திட்டத்தின்கீழ் கடந்த 17 ஆம் திகதி முதல் நேற்றுவரை 8 ஆயிரத்து 689 சுற்றிவளைப்புகள் இடம்பெற்றுள்ளன எனவும் அவர் கூறினார்.

கைதானவர்களில் 353 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

அதேவேளை, சுற்றிவளைப்புகளின்போது 7 கிலோ ஹொரோயினும், ஐஸ் போதைப்பொருள் 3 கிலோவும் கைப்பற்றப்பட்டுள்ளன. 2 லட்சத்துக்கு மேற்பட்ட கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles